ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த சந்திரகிரி தொண்டை வாடா என்ற பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று இரவு ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அந்த ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி வந்த ஆட்டோவில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த பெண் கத்திக் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பித்து அந்த பெண் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியிடம் சென்று தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த காவலாளி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலை துரத்தி உள்ளது. ஆனால் 4 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிக்கு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார்கள். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.