செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களுடைய பதவி, பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள தலைமை செயலாளர்….. மாண்புமிகு அண்ணன் எடப்பாடி அவர்களை தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் உடைய கூட்டம் என்பது நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 74 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். வருகை தந்த தலைமை கழக நிர்வாகிகள் என்று பார்த்தால் 65 . அதுமட்டுமல்லாமல் 4 பேர் இந்த தலைமைக் கழக கூட்டத்திற்கு வர முடியவில்லை என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் உடம்பு சரியில்லை மருத்துமனை சென்றுள்ளதாக தகவல் தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார். அதேபோல கழக அமைப்புச் செயலாளர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வர இயலவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார்.
சிறுபான்மை நலத்துறை செயலாளர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளார். எனவே இதில் 5 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே பெரும்பான்மையாக தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கின்ற நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பது வருகின்ற… 11. 07. 2021 என்று பொதுக்குழுவில் கூட்ட அழைப்பிதழ் தபாலில் அனுப்ப வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அது முடிவு செய்யப்பட்டது. விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் பற்றி நான் சொல்ல மாட்டேன். எதை சொல்லவேண்டுமோ, அதை சொல்றேன். எதை சொல்லக்கூடாதோ, அதை சொல்ல மாட்டேன். இன்னைக்கு எடுக்கப்பட்ட பல முடிவுகள் குறித்து, பேசப்பட்ட கருத்துகள் குறித்து அறிவிப்புகளாக வருமா ? என்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.