வெப்சீரிஸ் படக்குழுவினர் திரை பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுழல் தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சுழல் தி வெப்சீரிசின் கதையை புஷ்கர் காயத்ரி எழுதியுள்ளனர். இதை அனுசரன் பிரம்மா இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் 8 அத்தியாயங்களை கொண்டுள்ளது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதற்காக புஷ்கர் காயத்ரி தம்பதியினர் திரையுலக பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதாவது பிரபல இயக்குனர் ராஜமவுலி, நடிகர் ஹிருத்திக் ரோஷன், சமந்தா, வித்யாபாலன், பிரியங்கா சோப்ரா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் சுழல் தி வெப்சீரிஸ் குறித்த விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். இதன் காரணமாகத்தான் புஷ்கர் காயத்ரி தம்பதியினர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.