Categories
மாநில செய்திகள்

(2022) தேசிய விருதுக்கு தேர்வான விருதுநகர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தேசிய எம்.எஸ்.எம்.இ. விருதுகள் 2022ஆம் வருடத்துக்கான பிரிவில் விருதுநகர் மாவட்டமானது முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் “நிடி ஆயோக்” அமைப்பு நாட்டின் பல மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு மேற்கொண்டு, அதில் இருந்து 112 பின் தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அவற்றை முன்னேற்றும் அடிப்படையில் கடந்த 2018-ல் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவற்றில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதற்காக, தேசிய விருதுக்கு விருதுநகர் மாவட்டமானது தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

Categories

Tech |