Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டோ கவிந்து LKG மாணவன் பலி – நெல்லையில் பெரும் சோகம் …!!

ஆண் – பெண் குழந்தைகள் என 6பேர் ஆட்டோவில் காலை பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள். இந்த பள்ளி  வசவபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.நெல்லை மாவட்டம் வசவபுரம் – செய்துங்கநல்லூர் சாலையில்  இந்த ஆட்டோ வந்தபோது….  சாலையில் ஏற்கனவே சாலை விரிவாக்க பணி யாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆட்டோ வரும்பொழுது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருக்கிறது.

எதிர்பாராத விதமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஆட்டோவின் அடியில் எல்கேஜி படித்து வரக்கூடிய சிறுவன் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருக்கிறான்.மற்ற குழந்தைகள் 5 குழந்தைகள்  ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்கள். சிறுவன்  உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள். மற்ற மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |