தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www. tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மேலும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு அவரவர்களின் செல்போன்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING : மாணவர்களே….! வெளியானது 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…..உடனே பாருங்க….!!!!
