வருகின்ற ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு மாதச் சம்பளதாரர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎஃப் மற்றும் வேலை நேரம், மூல வரி பிடித்தம் உள்ளிட்டவை மாறப் போகின்றது. அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களில் வேலை நேரம் (12 மணி நேரம்) பிஎஃப் தொகை அதிகரிக்கப்படும் என்றும் தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஊழியர்களின் மாத சம்பளம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்களின் மொத்த சம்பளத்திலிருந்து 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் 12 மணி நேரம் வரைக்கும் ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும் எனவும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும், 5 மணி நேரத்திற்கு ஒருமுறை ஊழியர்களுக்கு இடைவெளி கண்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.