அதிவேகமாக வாகனங்களை இயக்க கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளா சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானது. சமீபத்தில் ஸ்ரீ மதுரையில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதைப்போல பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறும்போது, அதிவேகமாக மலைபாதையில் வாகனங்களை இயக்க கூடாது. அவ்வாறு இயக்கும் போதுதான் விபத்து ஏற்படுகிறது. எனவே விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாகனத்தை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.