கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்க வேண்டும் என்று விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநில மாநாடு நாகை அவுரித்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கி பேசினார். அதில் விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 வழங்க வேண்டும் . அரசு நிதி உதவி மூலம் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோவில் இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வசிக்கும் விதவைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறையில் விதவை பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விதவைப் பெண்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விதவைப் பெண்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.