Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை”…. திருடிய 2 பேரை கைது செய்த போலீஸார்…!!!!!

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் 36 வயதுடைய ஐயப்பன் என்பவரையும் 21 வயதுடைய அருள்குமார் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் இருவரும் திருடியதை ஒப்புக் கொண்டார்கள். பின் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |