Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்ஐ எழுத்துத்தேர்வு…. 5,272 பேர் தேர்வு எழுதினர்…. !!!!!!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022 ஆம் வருடத்திற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வை  தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர், ஆர் வி எஸ் கல்லூரி, கோவில்பாளையம், எஸ்எம்எஸ் கல்லூரி, மலுமிச்சம்பட்டி, ஹிந்துஸ்தான் கல்லூரி, கவுண்டம்பாளையம் கொங்குநாடு கல்லூரி என நான்கு இடங்களை தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வு மையத்திற்கு காலை 7 மணி முதல் தேர்வர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக தேர்வர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு  கைகளை சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்வு நடைபெற்று நான்கு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தவிர மற்றவர்கள் யாரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்துத்தேர்வை 5,272 பேர் எழுதியுள்ளனர். 1, 619 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் தேர்வில் அனைவரும் முக கவசம் அணிந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக தேர்வர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வர்கள் அடையாள அட்டை, அழைப்பு கடிதம், பேனா ஆகிய மூன்று மட்டுமே தேர்வர்கள் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கொங்குநாடு கல்லூரியில் நடைபெற்ற தேர்வை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் போன்றோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |