Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 03.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

03-02-2020, தை 20, திங்கட்கிழமை,

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

 

குளிகன்- மதியம் 01.30-03.00,

 

சுப ஹோரைகள்-

மதியம்12.00-01.00,

மதியம்3.00-4.00,

மாலை06.00 -08.00,

இரவு 10.00-11.00.

 

 

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாக கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் பெரியவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

ரிஷபம்

இன்று பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். இன்று வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று செய்யும் அனைத்து செயல்களிலும் தடை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்று. எதிர்பாராமல் வந்த பணம் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் நபர்கள் வழியில் நன்மை நடக்கும். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று இல்லத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்திகள் வரும். எடுத்த அனைத்து முயற்சிகளிலும் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு உத்தியோகத்தில் பெருமை மிக்க பதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். கடன் அனைத்தும் வசூலாகும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பு நல்ல படியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறாமை மற்றும் போட்டி இன்று குறையும். தெய்வீக நம்பிக்கை ஏற்படும். லாபம் பன்மடங்காகும்.

கன்னி

உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் தேவையற்ற செலவுகள் இன்று இருக்கும். வியாபாரத்தில் மந்தமான நிலை ஏற்படும். வயதில் மூத்தவர்களின் அறிவுரை புதிய நம்பிக்கை கொடுக்கும். உடன் இருப்பவர்களை அனுசரணை செய்து செல்வது மிகவும் நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

துலாம் 

இன்று மனக் குழப்பத்துடன் தென்படுவீர்கள். பிறரிடம் காரணமில்லாமல் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் கடன் கொடுக்கவோ அல்லது வாங்குவதையோ தவிர்த்தல் நன்று.

விருச்சிகம்

இன்று தாராளமான தனவரவும் லக்ஷ்மி கடாட்சமும் ஏற்படும். பிள்ளைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். சுப  காரியங்களுக்கான முயற்சி இன்று வெற்றியை கொடுக்கும். உத்தியோகம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு

இன்று அனைத்து செயலிலும் மனநிறைவுடன் செயல்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்திருந்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் ஒற்றுமையாக இருப்பார்கள். இன்று  சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உத்தியோகத்தில் வேலை சுமை அதிகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முயற்சிகளில் உடன் இருப்பவர்களால் தடை ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கப்பெறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.  பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இன்று வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை தலைத்தூக்கும். பூர்வீக சொத்து வழியில் லாபம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை பெறலாம். கடன் பிரச்சினைகள் விலகும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சுப செய்திகள் இல்லம் தேடி வரும். மனமகிழ்ச்சி அடையும் நாளாக இன்று நாள் இருக்கும். தொழிலில் செலவுகள் கட்டுக்குள் நிற்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

Categories

Tech |