இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இங்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 470 க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாய் உயர்ந்து, 550 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ஒடோ டீசல் ரூபாய் 60 க்கு உயர்ந்து ரூபாய் 460க்கும், சூப்பர் டீசல் ரூபாய் 75 உயர்ந்து ரூபாய் 520க்கும் விற்பனையாகி வருகின்றது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இலங்கையில் உள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Categories
பொருளாதார நெருக்கடி: “இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு”….. மக்கள் அவதி…..!!!!
