Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த போலீஸ்காரர்…. எச்சரித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

போலீஸ்காரர் சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பரமசிவம் பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டரிடம் முத்துப்பாண்டி என்பவர் தன்னுடன் தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மற்றொரு போலீஸ்காரருடன் அங்கு சென்று முத்துப்பாண்டியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது முத்துப்பாண்டி இளையான்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் சோதனை சாவடிக்கு சென்ற முத்து பாண்டி சப்- இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முத்துப்பாண்டி மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |