மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வடக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவரை பிரிந்து ஒரு பெண் தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான அருண்பாண்டி(23) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.