Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி…. நீதிமன்ற வாளாகத்தில் நடந்த சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை தாக்கிய நபரை கைது செய்யுமாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள செம்பட்டி வடக்குத் தெருவில் விஜயலட்சுமி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன்(56) என்ற கணவர் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி வேல்முருகனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ஜெயலட்சுமி அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வேல்முருகன் விஜயலட்சுமிக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதனை அடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே வேல்முருகன் ஜெயலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த நீதிபதி நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை தாக்கிய வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |