Categories
தேசிய செய்திகள்

“11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை”… பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. அதிருப்தியில் ஆசிரியர்கள்…!!!!!

தமிழக பள்ளிகளில் இரண்டு வருடங்களுக்கு பின் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். மேலும் பொதுத் தேர்வுகளும் இரண்டு வருடங்களுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27  தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல பள்ளிகளில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும் வழக்கமாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் இது பற்றி புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வழக்கமாக வருடம்தோறும் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை பத்தாம் வகுப்பு மதிப்பெண் மாணவர் சேர்க்கை அடிப்படையில் வழங்கப்படும். ஆனால் தற்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை ஆணையர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அரசு பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களை விட அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. மேலும் தனியார் பள்ளிகளும் அதிகளவில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் தற்போது இட ஒதுக்கீடு முறை சாத்தியமில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |