Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால்…. இத்தனை பேர் காப்பாற்றப்பட்டனரா….? பிரபல இதழில் வெளியான ஆராய்ச்சி அறிக்கை….!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் 42 லட்சம் பேர் காப்பாற்றபட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. இந்த லான்செட் இதழ் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூறியதாவது, ” உலகளவில் முதல் முறையாக பிரிட்டன் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியில் இருந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் 42 லட்சம் பேர் மரணத்தில் இருந்து தப்பியுள்ளார்கள்.

உலக அளவில் 2 கோடி பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து தப்பினர். மேலும் அமெரிக்க நாட்டில் நாட்டின் 19 லட்சம் பேர், பிரேசில் நாட்டில் 10 லட்சம் பேர், பிரான்ஸ் நாட்டில் 6.31 லட்சம் பேர், பிரிட்டன் நாட்டில் 5.07 லட்சம் பேர் உயிர் தப்பியுள்ளார்கள். இதேபோன்று உலக அளவில் கொரோனா தொற்றினால் 2 கோடி உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகையில் 40% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தியிருந்தால் 5.99 லட்சம் பேரின் மரணத்தை தடுத்திருக்கலாம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆலிவர் வாட்சன் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது, ” இந்திய நாட்டின் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த கொரோனா பெரும் தொற்றுக்கு இந்தியாவில் 5.24 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசு கூறுகின்றது. ஆனால் 48.2 லட்சம் பேர் முதல் 56.3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசின் புள்ளிவிவரத்தை விட 10 மடங்கு அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக” அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |