திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமானது நடந்தது. இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன்கள், வேலை வாய்ப்பு போன்ற அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர மோட்டார், சைக்கிள் வீல் சேர், காது வலி போன்ற உபகரணங்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர், மருத்துவர்கள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகப்பிரியா என பலர் பங்கேற்றனர்.