டிஜிட்டல் உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வருகையால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இழந்த தனது மனைவியை ஒருவர் சந்தித்தார். இந்த செய்தியானது உலகம் முழுவதும் வைரலானது.
இந்நிலையில் தற்போது பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் உயிரிழந்த தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குரலை தத்ரூபமாக மிமிக்ரி செய்யும் வகையில் அலெக்ஸாவை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது அந்த நிறுவனம்.