ரசாயன கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று ஒரு விதமான ரசாயன கசிவு ஏற்பட்டது. இந்த ரசாயன கசிவு அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குடோனில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் மலேசியாவில் இருந்து எச்.ஐ.வி. நோய்க்கு மருந்து தயாரிக்க கொண்டுவரப்பட்ட ரசாயன மூலப்பொருட்கள் இருந்த கண்டெய்னர் பெட்டியில் உராய்வு ஏற்பட்டு வெளியே கசிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த கண்டெய்னர் பெட்டியில் ஏற்பட்ட ரசாயன கசிவை சரி செய்து பாதுகாப்பாக ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்