Categories
உலக செய்திகள்

OMG: நிலமை மோசமடையும்…. எந்த நாடும் தப்பிக்க முடியாது….. ஐ.நா திடீர் எச்சரிக்கை….!!!!!

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது எனவும் ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா ஆகிய காரணங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டினி பிரச்சனை உருவாக்கியது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனிடையே உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் உரம் மற்றும் எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.

அதனால் நாடுகளில் அறுவடை பெரிதும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் அறிவிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த நிலைமை இன்னும் மோசமடையும். உலக அளவில் உணவு கிடைக்காத பிரச்சனை உணவு தட்டுப்பாடு ஆக மாறும். இதனால் உலக அளவில் பேரழிவு ஏற்படும். எந்த ஒரு நாடும் அதன் சமூக மற்றும் பொருளாதார பின் விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தச் செய்தி உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |