இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டியிலும் இந்தியா வென்று இத்தொடரில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்தை அதன் மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது.
நியூசிலாந்து சென்ற வெறு எந்த அணியும் இதுநாள் வரை அந்த அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. ஆனால் தற்போது இந்திய அணி அந்த சாதனையை செய்துள்ளது. இதனால் இச்சாதனையைப் படைத்த முதல் அணி இந்திய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.