Categories
தேசிய செய்திகள்

“நீ பாஸ் ஆக மாட்ட”…. கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மாணவன்…. 10 ஆம் வகுப்பில் அபார வெற்றி….!!!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா கொடு மண் சாலைக்கு அருகே ஒரு சுவாரசியமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறுவனின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சிகரமான தலைப்பு ஒன்று உள்ளது. “சிலர் வரும்போது வரலாறு வழி மாறும்”என்ற தலைப்பின் சிறுவன் வைத்துள்ள அந்த பிளக்ஸ் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நடந்த முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற குஞ்சாக்கு ஜிஸ்ணு என்ற சிறுவன் தனக்குத்தானே வாழ்த்து தெரிவித்த பிளக்ஸ் வைத்துள்ளான்.

அது சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது. அங்காடிகளை சேர்ந்த ஓமன குட்டன் மற்றும் தீபா தம்பதியரின் மகன் ஜிஸ்னு. இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பிளக்ஸ் வைத்துள்ளார். அவரது சகோதரியும் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்தக் குடும்பத்தினருக்கு மின் இணைப்பு அண்மையில் கிடைத்துள்ளது.

இத்தனை நாட்களும் மண்ணெண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் தான் படித்து வந்துள்ளனர். இருவரின் பெற்றோர்களும் தினக்கூலி தொழிலாளர்கள். இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கு செல்ல பேருந்தில் 14 கிலோ மீட்டர் பயணம் செய்தனர். தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன் என்று தனது நண்பர்களும் குடும்பத்தினரும் தன்னை கேலி செய்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளார்.

அவர்களின் வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதனால்தான் பிளக்ஸ் போர்டை நிறுவ முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தனது இனிமையான பழிவாங்கும் ஒரு பகுதி ஆகும் என்ற சிறுவன் கூறினார் .அந்த சிறுவனின் கையில் மிகக்குறைந்த பணம் மட்டுமே இருந்ததால் நவஜோதி விளையாட்டு மற்றும் கலைக்குழுவின் உதவியை நாடி அவர்களின் உதவியுடன் பிளக்ஸ் போர்டு நிறுவினார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |