தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முககவசம் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 10 முதல் 15 சதவீதம் வரை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் குழந்தைகளுக்கு சளி,காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சல் இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தால் அஜாக்கிரதையாக இல்லாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும், ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 18 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால் மக்கள் கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.