Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், பும்ரா அபாரம்…. ஒயிட் வாஷ் ஆனது நியூசிலாந்து …!!

நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 07 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் கேப்டனாகச் செயல்படுகிறார்.

பின்னர் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் – கே.எல். ராகுல் களமிறங்கினர். இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ராகுல் – ரோஹித் இணை ஜோடி சேர்ந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியால், இந்திய அணி பவர் – ப்ளே ஓவர்கள் முடிவில் 53 ரன்களை எடுத்தது.

சஞ்சு சாம்சன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசி.,

தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பி இந்திய அணி ரன்கள் சேர்த்துவந்தது. ஒன்பது ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 10ஆவது ஓவரில் டாப் கியருக்கு மாறியது. அந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்க 10 ஓவர் முடிவில் 84 ரன்களை எட்டியது.

பின்னர் அதிரடிக்கு மாறிய இந்தக் கூட்டணி நியூசி. பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கே.எல். ராகுல் பென்னட் பந்தில் அடித்த ஷாட் எட்ஜாகி சாண்ட்னரிடம் கேட்சானது. இதனால் ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய ராகுல்

பின்னர் இணைந்த ரோஹித் – ஸ்ரேயாஸ் கூட்டணி சிறிது நேரம் நிதானமாக ஆட, 15ஆவது ஓவரின்போது அதிரடிக்கு மாறியது. பின்னர் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இந்தக் கூட்டணியின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 16 ஓவர்களில் 131 ரன்களை எட்டியது. அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட உடல் பிரச்னையால் ரிடையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். இதனால் சிவம் தூபே களமிறங்கினார்.

60 ரன்கள் அடித்த ரோஹித்

18ஆவது ஓவரில் இந்திய அணி மூன்று ரன்களை மட்டும் எடுக்க, 19ஆவது ஓவரில் சிவம் தூபே விக்கெட்டை பறிக்கொடுத்ததோடு ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் மனீஷ் பாண்டேவின் ஆட்டத்தால் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 31 பந்துகளில் 33 ரன்களும், மனீஷ் பாண்டே நான்கு பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.

Image

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அசுரத்தனமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறிக் கொண்டு இருந்த நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிம் செரிபெர்ட் – ராஸ் டெய்லர் மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்திய நிலையில் இருவரையும் நவதீப் சைனி ஆட்டமிழக்க செய்தார்.

Image

அதை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்து. இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து சாதனை வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ராஹ் 3 விக்கெட்டும் , சைனி , தாகூர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Categories

Tech |