Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு…”டிக்கெட் விலையை உயர்த்த விமான நிலையங்கள் முடிவு”…!!!!!!

விமான எரிபொருள் விலை உயர்வின் காரணமாக டிக்கெட் விலையை உயர்த்த நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது சீசன் இல்லாத காலங்களிலும் கட்டணம் குறைவாக இல்லை. இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் கவலை  அடைந்திருக்கின்றனர். மேலும் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து ரியாத் செல்லும் விமானத்திற்கு 49,000 ஆயிரம் வசூல் செய்து வருகிறது. ரியாத்தை அடைய மற்ற விமான நிலையங்களில் 22 மணி நேரம் காத்திருக்க வேண்டும். இருந்தபோதிலும் இதே பிரிவில் ஏர் அரேபியா ரூபாய் 28,690 வசூல் செய்து வருகிறது. இதில் 10 கிலோ பொருட்களை மட்டுமே இலவசமாக எடுத்துச் செல்ல முடியும். மேலும் அதிக பொருட்களை எடுத்து செல்ல வேண்டுமானால் பொருட்களுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Categories

Tech |