Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்..!!

கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், சிறுவனைக் கொலை செய்த நபர், மரேகா குவான்பதி கிராமத்தைச் சேர்ந்த ராம்வீர் குர்ஜார் என்பதும் சிறுவன் காலையில் எருமைகளுக்கு உணவு வைத்துவிட்டு வீடு திரும்பும்போது சுடப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

ஆனால், கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தலைமறைவாகவுள்ள ராம்வீரைக் கைது செய்யும் முயற்சியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஐந்து காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |