தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 முதுநிலை ஆசிரியர்களுக்கு 12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.