கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 124 நாட்களுக்கு பின் நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை அரசு துணை செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாலும், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories
“அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்”….. தமிழக அரசு உத்தரவு….!!!!
