இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் 100 ஆக பதிவாகி கொண்டிருந்த தொற்று பரவலின் எண்ணிக்கை தற்போது 500 தாண்டி சென்றுவிட்டது. இதனால் சுகாதாரத்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் , ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.