Categories
மாநில செய்திகள்

தனித்தேர்வர்களே….! “செய்முறை பயிற்சி வகுப்பு”….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 20ஆம் தேதி வெளியானது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான வழிமுறையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 27 முதல் ஜூலை 4 வரையிலான நாட்களில் பெயர்களை பதிவு செய்யலாம். தனித்தேர்வர்கள் 2012 முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றார் பதிவு செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |