Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடுமையாக பரவும் காட்டுத்தீ…. இரவு, பகலாக தொடரும் தீயணைப்பு பணி…!!!

துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள்.

மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில் பகலில் வெப்பநிலை மற்றும் பலத்த காற்றால் அதிவேகத்தில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தீயை கட்டுப்படுத்தும் பணி அதிக சவாலாக இருப்பதாக வனத்துறை மந்திரி கூறியிருக்கிறார். தீ பரவி வரும் பகுதிகளில் தற்போது வரை 51 குடியிருப்புகளிலிருந்து 150 மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |