Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்…. 1000 மக்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்டிகா ஆகிய மாகாணங்களில் கடும் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகமான கட்டிடங்கள் மோசமான நிலையில் இருக்கிறது. எனவே அந்த கட்டிடங்கள் சிறு நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவை கூட தாங்காமல் இருக்கின்றன.

எனவே, கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பக்டியா மகாணத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து போனது. அதை தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இடிபாடுகளில் மீட்பு குழுவினர் தோண்டிய போது அதிகமான பிணங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அதன்படி சுமார் 1000 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |