நாடு முழுவதும் நலிவடைந்த மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் அனைத்து உதவிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே இந்த சலுகைகள் அனைத்தையும் பெறமுடியும். அப்படி ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு ஆதார் உடன் இணைக்க வில்லை என்றால் உங்களால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது . உங்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப் படுவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இணைக்க,
1. முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற வெப்சைட்டில் செல்லவும்.
2. இப்போது ‘Start Now’ என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
4. இப்போது ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
5. அதன் பிறகு ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
6. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி submit கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக இல்லாமல் நேரடியாக ரேஷன் கார்டு மற்றும் ஆதார் எண் இணைக்க விரும்பினால் ஆதார் அட்டை நகல்,ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு தாரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு ஆதார் அட்டை பயோ மெட்ரிக் தரவு சரிபார்ப்பு ரேஷன் கார்டு மையத்தில் செய்து கொள்ள முடியும்.இந்த வேலையை ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னரே செய்து முடிப்பது நல்லது.