மேற்கு வங்கத்தில் பிறந்த மகளை தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதுரியாவில் கடந்த புதன்கிழமை காலை பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுஞ் செயலுக்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . புதிதாக பிறந்த குழந்தை அவருக்கு தொடர்ந்து மூன்றாவது பெண் குழந்தை, மேலும் கருமையான நிறத்தில் பிறந்ததும் தெரியவந்துள்ளது.
குற்றவாளி ரோகுல் அமீன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். தொழில் ரீதியாக சிறிய கால கட்டிட ஒப்பந்ததாரர், காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டார். அமீன் தற்போது போலீஸ் காவலில் உள்ள நிலையில், பிறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தையின் தாயான ரெஹானா பேகம், இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு, அவரது கணவரால் சில காலம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், ரெஹானா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். மூன்றாவது பெண் குழந்தையைப் பெற்ற பிறகு திங்கள்கிழமை மாலை முதல் பதற்றமாக இருந்ததாக ரெஹானா காவல்துறையிடம் தெரிவித்தார். குழந்தை பிறந்தது முதல் புதிதாகப் பிறந்த குழந்தையை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை அவர் கழிவறைக்கு சென்றபோது, பிறந்த குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் ஒன்றுகூடி அமீன் இஸ்லாமை அடித்து அங்கு கட்டி வைத்தனர். இது பற்றி அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.