நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் தன் தந்தை பாலாஜி, உறவினர் ஆனந்த், காமாட்சி ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி செல்வதற்காக வேளச்சேரி மெயின் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார்.
வேளச்சேரி காந்தி சாலை அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு பிரசன்ன வெங்கடேஷ் காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். உடனடியாக காரில் இருந்த 4 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்துவிட்டது. கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.