Categories
சினிமா மாநில செய்திகள்

OPS- க்கு ஆதரவு…. கையில் பூங்கொத்தொடு…. வீட்டுக்கே சென்ற பிக்பாஸ் பிரபலம்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் பாலாஜி மனைவியும், பிக்பாஸ் பிரபலமுமான நித்யா ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கையில் பூங்கொத்தொடு ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினர். கள நிலவரம் தெரிந்து போனாரா? தெரியாமல் போனாரா என்பது குறித்து தெரியவில்லை.

Categories

Tech |