Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING; 5ஆவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்…. !!

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் 5ஆவது டி20 போட்டியில் இந்தியா டாஸ்சை வென்றுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் வெறு எந்த அணியும் இதுநாள் வரை நியூசிலாந்துக்குச் சென்று, அந்த அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. ஆனால் தற்போது இந்திய அணிக்கு அந்த வாய்ப்பானது கிட்டியுள்ளது. ஏற்கனவே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய் அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 5ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி_க்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா வழிநடத்துகின்றார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Categories

Tech |