Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. காய்கறி விற்ற மூதாட்டியை கடித்த குரங்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

காய்கறி விற்பனை செய்த மூதாட்டியை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி காயிதே மில்லத் நகர் பகுதியில் நேற்று காய்கறி விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது குரங்குகள் காய்கறிகளை குறிவைத்து வண்டி அருகே வந்துள்ளது. இதனை பார்த்த சின்னம்மாள் குரங்குகளை விரட்டியுள்ளார். இதனால் ஒரு குரங்கு மூதாட்டியை கடித்ததோடு, தள்ளுவண்டியில் இருந்த காய்கறிகளை கீழே போட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் குரங்குகளை விரட்டியடித்து காயமடைந்த மூதாட்டியை மீட்டு தம்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காயிதே மில்லத் நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |