Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அந்தூர் கிராமத்தில் அண்ணாதுரை(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை வேலைக்கு செல்வதற்காக குன்னம் நோக்கி நடந்து சென்றார். அப்போது ஆய்க்குடி கிராமத்தை சேர்ந்த உஷா என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி முன்னால் சென்ற அண்ணாதுரை மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த அண்ணாதுரை மற்றும் உஷா ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |