Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் இருந்து ஸ்டீல் தகடு ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ரமேஷ்(30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் கிளீனராக மணிகண்டன்(24) என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |