யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அபர்ணா பாலமுரளி இதைப்பற்றி எல்லாம் தன்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படம் என நடித்து வருகின்றார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது உடல் எடை அதிகரித்து இருப்பதால் இணையத்தில் தன்னை கேலி செய்து வருகின்றார்கள். முகத்தை மறைத்துக் கொண்டு எங்கோ இருந்து கொண்டு ஒருவரை எவ்வளவு வேண்டுமானாலும் கேலி செய்ய முடியும். ஒருவரை விமர்சிக்கும் முன் அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பேட்டியின்போது நடிகைகளிடம் அவர்களின் நடிப்பை பற்றியும் கதாபாத்திரம் பற்றியும் கேள்வி கேட்காமல் எப்போது கவர்ச்சியாக நடிக்க போகிறேன் என்றும் எந்த நடிகருடன் நடிக்க ஆசை? எப்போது திருமணம்? திருமணம் செய்து கொள்ளும் நபர் எப்படி இருக்கவேண்டும்? என கேள்வி கேட்கின்றார்கள். இந்த கேள்விகளை கேட்கும் போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். தயவுசெய்து இந்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.