மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது. மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 பேருக்குப் பொருத்தப்பட்டது.