Categories
மாநில செய்திகள்

ALERT:அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. புகார் தெரிவிக்கும் எண் இதுதான்…. இனிமேல் அலர்டா இருங்க….!!

தமிழகத்தில் தற்போது ஆன்லைன் வழியாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக சேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. படித்தவர்களாக இருந்தாலும் கூட இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பல லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றது. அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏதேனும் இணையதள முகவரியை அனுப்பி அதன் மூலமாக எளிதில் உங்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடுகின்றனர். இதனால் இதுபோன்ற குறுஞ்செய்திகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சந்தேகப்பட ஏதேனும் குறுஞ்செய்திகள் உங்களது எண்ணிற்கு வந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பண மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு நுகர்வோர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நீங்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்றால் உடனே காவல்துறையை அணுக வேண்டும். ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசடிகளை சிக்கிக் கொண்டு பணத்தை இழந்தவர்கள் 155260 என்கின்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வழியாக பணத்தை இழந்தவர்கள் புகார்கள் பெறப்பட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் திருப்பி வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் புகார் அளித்த சில மணி நேரங்களில் மோசடி செய்யப்பட்டவவர்களுக்கு ஒப்புகை என் வழங்கப்படுகிறது.

Categories

Tech |