கல்லூரி மாணவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனாண்டிப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசிமணி(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் அண்டு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி துளசிமணி கல்லூரிக்கு காலதாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் துளசிமணியின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த துளசிமணி கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்று எலி மருந்தை வாங்கியுள்ளார்.
பின்னர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு துளசிமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி துளசிமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.