நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நியூயார்க்கின் ஏரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ள ஆடம்ஸ் மேயர் இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 2000 வாகனங்களில் முதல் கட்டமாக 100 வாகனங்கள் புல்டோசர் மூலம் அளிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். அளிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் கழிவுகளை அனைத்தும் பழைய உலோகங்களாக மாற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.