Categories
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ : புது ரூட்டில் செம க்யூட்….. எந்தெந்த ஏரியாக்கள் வழியாக தெரியுமா?….!!!!

சென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத் திட்டத்தில் ஆரஞ்சு லைனில் உருவாகும் புதிய வழித்தடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போதைய நிலையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது. அதன்படி ப்ளூ லயனில் சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலும், கிரீன் லைனில் பரங்கிமலை மெட்ரோவில் இருந்து சென்னை சென்ட்ரல் மெட்ரோ வரையிலும் 2 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையில், பூந்தமல்லி பைபாஸ் முதல் லைட் ஹவுஸ் வரையிலும், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது வழித்தடமான பூந்தமல்லி பைபாஸ் முதல் லைட் ஹவுஸ் வரையிலான ஆரஞ்சு லயனில் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த வழித்தடம் சுரங்கப்பாதையில் அமைய உள்ளதால் அதற்கான செயல்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நந்தனம் வரையிலான பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பூமிக்கு அடியில் துளையிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. ஒரு ரயில் மூன்று பெட்டிகள் வீதமாக 20 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு வழித்தடமானது கலங்கரை விளக்கம் மெட்ரோவில் தொடங்கி கச்சேரி சாலை, திருமயிலை மெட்ரோ, ஆழ்வார்ப்பேட்டை, பாரதிதாசன் சாலை, படகு குழாம், நந்தனம், பனகல் பூங்கா, கோடம்பாக்கம், மீனாட்சி கல்லூரி, பவர் ஹவுஸ், வடபழனி, சாலி கிராமம், அவிச்சி பள்ளி, ஆழ்வார் திருநகர் வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர் சந்திப்பு, போரூர் புறவழிச்சாலை, தெள்ளியரகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூவிருந்தவல்லி வழியாக பூவிருந்தவல்லி புறவழிச்சாலையை சென்றடையும்.

இது வேலைக்கு செல்பவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விரைவாக வந்து சேர முடியும். தொலை தூரங்களில் வீடுகள் எடுத்து தங்கி இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.

Categories

Tech |