Categories
மாநில செய்திகள்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை….. “இப்படி தான் நடத்த வேண்டும்”…. வெளியான முக்கிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும். பரிந்துரை அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யக் கூடாது. எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |