இஸ்ரேலில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அந்த கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி ஏற்றது. இருந்தபோதிலும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
எம்பிக்கள் பலர் பிரதமர் நப்தாலி பென்னட்க்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மேலும் அவர்கள் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்று அரசை கவிழ்க்கும் என மிரட்டல் விடுத்து வருகிறார்கள். குழப்பத்தை சரிசெய்து கூட்டணியே நிலைத்திருக்கச் செய்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த நப்தாலி முடிவு செய்திருக்கிறார்.
மேலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மசோதா நிறைவேற்றப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது அந்த நாட்டில் மூன்று வருடங்களில் நடக்கும் ஐந்தாவது பொது தேர்தலாக அமையும். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் தற்போதைய வெளியுறவு மந்திரி யாயிர் லாபிட் தேர்தல் வரை இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.